/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நகராட்சி பொதுக்கழிப்பிடம் பயன்பாட்டிற்கு வருமா?
/
நகராட்சி பொதுக்கழிப்பிடம் பயன்பாட்டிற்கு வருமா?
ADDED : ஏப் 02, 2025 03:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனத்தில் அமைச்சர் திறந்து வைத்த பொது கழிப்பிடம் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டி கிடக்கிறது.
திண்டிவனம் தீர்த்தக்குளத்தில், நகராட்சி சார்பில் நவீன வசதிகளுடன் கூடிய பொது கழிப்பிடம் கடந்த ஆண்டு கட்டப்பட்டது. அப்போதைய அமைச்சர் மஸ்தான் கழிப்பிடத்தை திறந்து வைத்தார்.
ஆனால் இதுவரை கழிப்பிடம் பயன்பாட்டிற்கு வரவில்லை. கழிப்பிடத்தை பூட்டி வைத்துள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் பொது வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. பூட்டி கிடக்கும் பொது கழிப்பிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.