/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் குற்றச்சம்பவங்கள்... கட்டுப்படுத்தப்படுமா:புதிய டி.ஐ.ஜி., எஸ்.பி.,யின் அதிரடி நடவடிக்கை தேவை
/
விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் குற்றச்சம்பவங்கள்... கட்டுப்படுத்தப்படுமா:புதிய டி.ஐ.ஜி., எஸ்.பி.,யின் அதிரடி நடவடிக்கை தேவை
விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் குற்றச்சம்பவங்கள்... கட்டுப்படுத்தப்படுமா:புதிய டி.ஐ.ஜி., எஸ்.பி.,யின் அதிரடி நடவடிக்கை தேவை
விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் குற்றச்சம்பவங்கள்... கட்டுப்படுத்தப்படுமா:புதிய டி.ஐ.ஜி., எஸ்.பி.,யின் அதிரடி நடவடிக்கை தேவை
ADDED : ஜன 28, 2026 06:08 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும் என, புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் உயரதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையை மக்கள் எதிர்பார்த்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில், உயர் காவல் அதிகாரிகள் அவ்வப்போது மாற்றப்பட்டும், திருட்டு, சாராயம், போதை பொருள் விற்பனை போன்ற குற்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படாமல் தொடர்ந்து வருகிறது. நேர்மையான உயரதிகாரிகள் பலர் வந்தாலும், போதிய போலீசார் இன்றி பணி நெருக்கடி போன்றவற்றால், முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.
சமீபத்தில் தான், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., உமா, விழுப்புரம் எஸ்.பி., சரவணன் ஆகியோர் மாற்றம் செய்யப்பட்டனர். அனுபவம் வாய்ந்த டி.ஐ.ஜி., அருளரசும், துடிப்புமிக்க எஸ்.பி., சாய் பிரனீத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், திருட்டு, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருள் கடத்தல் தடுப்புக்கும் அமைக்கப்பட்ட தனிப்படைகள், டி.எஸ்.பி.,க்கான தனி குழுவினர் தீவிரம் காட்டாமல் செயல்படுவதும், அவர்களில் சிலர், வசதி வாய்ப்புக்காக தொடர் குற்றவாளிகளை கண்டுகொள்ளாமல் விடுவதும், சிலர் முறைகேடிற்கு துணை போவதும், இந்த குற்றங்களை தடுக்க முடியாமல் போயுள்ளது.
கடந்த 12ம் தேதி 40 தனிப்படை போலீசார், பள்ளி, கல்லுாரி சுற்று பகுதியில் குட்கா விற்பனையை கண்டுபிடிப்பதற்காக திடீர் ரெய்டு மேற்கொண்டனர். அப்போது, குட்கா விற்ற 20 கடைகளுக்கு சீல் வைத்தும், 21 பேர் கைது செய்தும், 50 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
முன்னதாக, விழுப்புரம் அருகே சரவணப்பாக்கத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 60 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர். கடந்த மாதம், ஆரோவில் பகுதியில் கஞ்சா வைத்திருந்த வடமாநில இளைஞர் இருவரையும் கைது செய்தனர். செஞ்சி, கூட்டேரிப்பட்டு, விழுப்புரம் பகுதியில் போதை மாத்திரைகள், கஞ்சா விற்ற 10 பேரையும் கைது செய்தனர். கடந்த டிச.22ம் தேதி, பெங்களூருவிலிருந்து பைக்கில் 220 கிலோ குட்கா கடத்தி வந்த இருவரை மணம்பூண்டி பகுதியில் போலீசார் கைது செய்தனர்.
மாவட்டத்தில், எப்போதும் இல்லாத வகையில், அதிகளவில் குட்கா, போதை பொருள் கடத்தல் தொடர்பாக, கடந்தாண்டில்(2025) 230 வழக்குகள் பதிந்து, 320 பேரை கைது செய்தனர். 5,500 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, 60 வாகனங்களை பறிமுதல் செய்தனர். கடந்த 2024ம் ஆண்டில் 4,822 கிலோ குட்காவும், கடந்த 2023ல் 3,043 கிலோ குட்காவும் தான் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. இப்படியே குற்ற பட்டியல் அச்சுறுத்துகிறது.
திறமையான இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் போன்றோர், காவல் தனி பிரிவுகளில் பலர் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். பெண் காவல் அதிகாரிகளும், பல்வேறு அலுவல் சார்ந்த பிரிவுகளில் சென்று முடங்கியுள்ளனர். இப்படி, அதிதீவிரமாக செயல்படும் இளம் அதிகாரிகளை இனம் கண்டு, சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், தனிப்படைகளிலும் அவர்களை நியமித்து, உயர் அதிகாரிகள் அதிரடி காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

