/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் நகரில் போக்குவரத்து பிரச்னை தீருமா ? : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தேவை

ADDED : ஆக 08, 2025 02:01 AM

விழுப்புரம்: நகரில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். போக்குவரத்தை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு முதல் கிழக்கு பாண்டி சாலை பகுதியில் மாதாகோவில் பஸ் நிறுத்தம் வரையில், தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது.
இந்த சாலை வழியாக தினந்தோறும், 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர்.
விழுப்புரம் நேரு வீதி வழியாக புதுச்சேரி, கடலுார், பண்ருட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு நுாற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்படுவதால், வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது.
விழுப்புரம் நகராட்சி எதிர்வரும் காலத்தில் மாநகராட்சியாக வாய்ப்பு உள்ளது.
மேலும் நகரில் மேற்கு புறம் புதிய பஸ் நிலையமும், கிழக்கு புறம் மார்க்கெட் மற்றும் 10,க்கும் மேற்பட்ட மேல்நிலை பள்ளிகள், பழைய பஸ்நிலையம், தியேட்டர்கள், மருத்துவமனைகள் உள்ளன.
கிழக்கு பாண்டி ரோடு மகாராஜபுரத்தில் இருந்து நான்குமுனை சிக்னல் வரை வாகனங்கள் செல்வதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது.
வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், விழுப்புரம் நகரைச் சுற்றி பைபாஸ் சாலையை இணைக்கும் வகையில் கூடுதலாக இணைப்பு சாலைகளை ஏற்படுத்தி, போக்குவரத்து பிரச்னையை சீரமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.