போக்குவரத்திற்கு இடையூறான டிரான்ஸ்பார்மர் மாற்றப்படுமா?
போக்குவரத்திற்கு இடையூறான டிரான்ஸ்பார்மர் மாற்றப்படுமா?
ADDED : மே 15, 2026 03:41 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரத்தில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் நகராட்சியில் பிரதான சாலைகளில் ஒன்றாக கே.கே., ரோடு உள்ளது. இச்சாலை வழியாக ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் சாலாமேடு, திருப்பச்சாவடிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
நேருஜி சாலையில், வீரவாழியம்மன் கோவில் சந்திப்பில் இருந்து கே.கே., ரோட்டிற்கு பிரியும் பகுதியில், சாலையோரத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளது.
இதனால், சாலை வளைவில் வாகனங்கள் திரும்பும்போது, அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தினந்தோறும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண, சாலையோரத்தில் இடையூறாக உள்ள டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
