/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., மாவட்ட செயலாளரை வலம் வரும் மாஜி எம்.எல்.ஏ.,வின் ஆசை நிறைவேறுமா?
/
தி.மு.க., மாவட்ட செயலாளரை வலம் வரும் மாஜி எம்.எல்.ஏ.,வின் ஆசை நிறைவேறுமா?
தி.மு.க., மாவட்ட செயலாளரை வலம் வரும் மாஜி எம்.எல்.ஏ.,வின் ஆசை நிறைவேறுமா?
தி.மு.க., மாவட்ட செயலாளரை வலம் வரும் மாஜி எம்.எல்.ஏ.,வின் ஆசை நிறைவேறுமா?
ADDED : நவ 25, 2025 04:55 AM
வி ழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டசபை தொகுதி யில், கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க., சார்பில் வெற்றி பெற்றவர் டாக்டர் மாசிலாமணி. கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில், பா.ம .க.,விடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இதையடுத்து வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் மயிலம் தொகுதியில், மீண்டும் தி.மு.க., வில் 'சீட்' பெற முயற்சி செய்து வருகிறார். திண்டிவனம் தொகுதியில் ஏற்கனவே தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றுள்ள இவர், திண்டிவனம், செஞ்சி, மயிலம் மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட அனுபவம் உள்ளவர்.
கட்சி நிர்வாகிகள் இல்ல விசேஷங்கள் அனைத்திற்கும், சளைக்காமல் நேரில் சென்று கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். முக்கிய பதவி இருந்தாலும், இல்லாவிட்டாலும் கட்சி நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்று வருகிறார். கடந்த தேர்தலின்போது, மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் மஸ்தானுடன், சற்று மன வருத்தத்தில் இருந்தார்.
தற்போது, மாவட்ட பொறுப்பாளரான மஸ்தான் எம்.எல்.ஏ.,வின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். எப்படியும், மயிலம் 'சீட்' கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மஸ்தானை பின் தொடர்ந்து வருகிறார். நிச்சயம் மாவட்ட பொறுப்பாளர் இந்த முறை , மாசிலாமணிக்கு 'சீட்' கிடைக்க வழிகாட்டுவார் என டாக்டரின் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

