/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி மார்க்கெட் கமிட்டி இடம் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?
/
செஞ்சி மார்க்கெட் கமிட்டி இடம் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?
செஞ்சி மார்க்கெட் கமிட்டி இடம் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?
செஞ்சி மார்க்கெட் கமிட்டி இடம் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?
ADDED : ஜன 09, 2024 01:08 AM
செஞ்சி மார்க்கெட் கமிட்டி தமிழகத்திலேயே அதிக நெல் வரத்து உள்ள மார்க்கெட் கமிட்டி என்ற பெருமைக்குரியது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த பெருமையை இழக்கும் வகையில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
நெல் கொண்டு வரும் விவசாயிகளை வீண் அலைச்சலுக்கு ஆட்படுத்தி மன உலைச்சலை ஏற்படுத்துகின்றனர். இடம் பற்றாக்குறை, தொழிலாளர் பற்றாக்குறை, கூலி பிரச்னை, ஆன்லைன் கொள்முதல் என அடிக்கடி பல்வேறு பிரச்னைகளை காரணமாக கட்டி நெல் கொள்முதளை பல நாட்கள் நிறுத்தி விடுகின்றனர்.
எத்தனை ஆயிரம் மூட்டைகள் வந்தாலும் திருப்பி அனுப்பாமல் கொள்முதல் செய்த மார்க்கெட் கமிட்டியில், தற்போது நாள் ஒன்றுக்கு 5000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கே அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள பிற மார்க்கெட் கமிட்டிகளில் குறைவான கொள்முதல் இருப்பதால் அங்கு பணிபுரிபவர்கள் நேரத்திற்கு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று விடுகின்றனர். செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் மட்டும் இரவு பகலாக வேலை இருப்பதால், நெல் வரத்தை குறைக்க திட்டமிட்டே அதிகாரிகள் செயல்படுகின்றனர் என விவசாயிகளும், வியாபாரிகளும் குற்றம் சாட்டுகின்றனர்.
இடம் பற்றாக்குறையை சரி செய்ய கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 15 கோடி ரூபாய் மதிப்பில் பெரிய அளவில் குடோன் வசதி ஏற்படுத்தினர். அதன் பிறகும் எந்த தீர்வும் ஏற்படவில்லை. அமைச்சர் மஸ்தான் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கமிட்டியை விரிவாக்கம் செய்வதற்கு 10க்கும் மேற்பட்ட முறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி விட்டார். ஆனாலும் எந்த தீர்வும் ஏற்படவில்லை.
நேற்று ஒரு நாள் பெய்த மழையினால் நெல் மூட்டைகளை கையாள இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை காரணம் காட்டி இன்றும், நாளையும் (9 மற்றும் 10ம் தேதி) நெல் கொண்டு வரவேண்டாம் என அறிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கி விட்ட நிலையில், விவசாயம் சார்ந்த செஞ்சியில் மார்க்கெட் கமிட்டியில் நடக்கும் வர்த்தகத்தை பொறுத்தே ஜவுளி, மளிகை, காய்கறி விற்பனையும் இருக்கும். தற்போது 2 நாள் மார்ககெட் கமிட்டிக்கு விடுமுறை விட்டிருப்பதால் விவசாயிகளிடம் பணப்புழக்கம் இருக்காது. இதனால் விவசாயிகள் மட்டுமின்றி செஞ்சியின் ஒட்டு மொத்த வர்த்தகமும் பாதிக்கும்.
நேற்று மார்க்கெட் கமிட்டியின் அறிவிப்பிற்கு பிறகு, அங்கிருந்த விவசாயிகள் ஆட்சி மாறியும் காட்சி மாறிவில்லை என வெளிப்படையாக தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.