sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஐ.டி., ஊழியரிடம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் பெண் கைது

/

ஐ.டி., ஊழியரிடம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் பெண் கைது

ஐ.டி., ஊழியரிடம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் பெண் கைது

ஐ.டி., ஊழியரிடம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் பெண் கைது


ADDED : மே 02, 2025 02:37 AM

Google News

ADDED : மே 02, 2025 02:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டக்குப்பம்:புதுச்சேரி அருகே ஐ.டி., ஊழியரிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி அடுத்த கூனிச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர், லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், சில தினங்களுக்கு முன், அவரது மொபைல் போனில் பேசிய பெண்ணின் வலையில் சிக்கினார்.

அவரிடம் கொஞ்சும் பாணியில் பேசிய அந்த பெண், கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடி கடற்கரை அருகே பழையபட்டின சாலையில் உள்ள லாட்ஜிக்கு அந்த வாலிபரை அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு தயார் நிலையில் இருந்த கும்பல், ஐ.டி., ஊழியரிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி தாக்கினர்.

அவர்களிடம் இருந்து தப்பித்த ஐ.டி., வாலிபர், நடந்த சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப் பதிந்து 4 பேரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவான புதுச்சேரி, நெட்டப்பாக்கம் புனிதவதி நகரைச் சேர்ந்த முருகன் மனைவி சரஸ்வதி, 40; காலாப்பட்டு பிரதீப்சுகன் ஆகிய இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று நெட்டப்பாக்கத்தில் பதுங்கியிருந்த சரஸ்வதியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us