/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குட்கா பொருட்கள் வைத்திருந்த பெண் கைது
/
குட்கா பொருட்கள் வைத்திருந்த பெண் கைது
ADDED : ஏப் 11, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: வளத்தி அருகே குட்கா பொருட்கள் விற்பதற்காக வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
வளத்தி அடுத்த கடலி-மாவனந்தல் கிராமத்தை சேர்ந்த அசீனாபீ, 49; இவர் அதே ஊரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் குட்கா பொருட்கள் விற்பனைக்கா வைத்திருந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வளத்தி சப்-இன்ஸ்பெக்டர் குருபரன் மற்றும் போலீசார் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதில் விற்பனைக்காக வைத்திருந்த குட்கா பொருட்களை போலீசார் கைப்பற்றி, வழக்கு பதிந்து அசீனாபீயை கைது செய்தனர்.

