நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அருகே வெளிமாநில பிராந்தி பாட்டில்களை விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
கண்டாச்சிபுரம் அடுத்த மலையரசன்குப்பம் கிராமத்தைச சேர்ந்த பூபதி யின் மனைவி பெரியாயி (61), இவர் தனது வீட்டில் வெளிமாநில மதுபாட்டில்களை வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து மலையரசன்குப்பத்தில் உள்ள பெரியாயியின் வீட்டை கண்டாச்சிபுரம் போலீசார் சோதனை செய்தனர்.
இதில் விற்பனைக்கு வைக்கப்ட்டிருந்த 10 பாட்டில் வெளிமாநில பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து பிராந்தி விற்பனை செய்த பெரியாயை கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.