/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆன்லைனில் கடன் வழங்குவதாக பெண்ணிடம் ரூ.6.45 லட்சம் மோசடி
/
ஆன்லைனில் கடன் வழங்குவதாக பெண்ணிடம் ரூ.6.45 லட்சம் மோசடி
ஆன்லைனில் கடன் வழங்குவதாக பெண்ணிடம் ரூ.6.45 லட்சம் மோசடி
ஆன்லைனில் கடன் வழங்குவதாக பெண்ணிடம் ரூ.6.45 லட்சம் மோசடி
ADDED : டிச 07, 2024 07:36 AM
விழுப்புரம்; ஆன்லைன் மூலம் கடன் தருவதாக கூறி, பெண்ணிடம் 6.45 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டிவனம் தாலுகா, அய்யந்தோப்பு பகுதியை சேர்ந்த ஏழுமலை மனைவி சரஸ்வதி, 55; இவரது மொபைல் போனுக்கு, கடந்த அக்டோபர் 3ம் தேதி குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும் என்று ஒரு மெசேஜ் வந்துள்ளது.
இதைப்பார்த்த அவர், அதிலிருந்த மொபைல் போன் எண்ணை தொடர்புகொண்டு பேசினார். அப்போது பேசிய நபர், உங்களுக்கு 7 லட்சம் ரூபாய் குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும், அந்த தொகையை உங்களுடைய வங்கிக்கணக்கில் செலுத்துவதற்கு, நுகர்வு கட்டணம், ஆவண கட்டணம், ஜி.எஸ்.டி.,க்கு பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
இதனை நம்பிய சரஸ்வதி, தனது வங்கிக் கணக்கிலிருந்து, ஜிபே மூலம் அந்த நபர் கூறிய வங்கியின் கணக்குகளுக்கு, 6 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை 46 தவணைகளாக அனுப்பி வைத்துள்ளார். பணத்தை பெற்ற அந்த மர்ம நபர், சரஸ்வதிக்கு கடன் தொகை வழங்காமல், பணத்தை ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து சரஸ்வதி அளித்த புகாரின் பேரில், மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.