நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண் கார் மோதி இறந்தார்.
சென்னை, ஓட்டேரியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் மனைவி ராமதிலகம், 54; இவர், வெளியூர்களில் உள்ள கோவில்களுக்கு தனியாக சென்று வருவது வழக்கம். கடந்த 10ம் தேதி சென்னையில் இருந்து திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று வருவதாக கூறி புறப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணியளவில் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மாமந்துார் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாகச் சென்ற கார் மோதி ராம திலகம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து ராமதிலகம் எதற்காக அங்கு வந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.