/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கார் மோதி சாலையோரம் நின்றிருந்த பெண் பலி
/
கார் மோதி சாலையோரம் நின்றிருந்த பெண் பலி
ADDED : ஜூலை 31, 2025 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி; கார் மோதி சாலையோரம் நின்றிருந்த பெண் உயிரிழந்தார்.
செஞ்சி அடுத்த சிட்டம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன் மனைவி அம்மாச்சி, 57; இவர், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, செஞ்சி விழுப்புரம் பிரதான சாலை, சிட்டம் பூண்டி பெட்ரோல் பங்க் எதிரில் ஓரமாக நின்றிருந்தார்.
அப்போது செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தவர், அதே இடத்தில் இறந்தார்.
இது குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.