/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மூதாட்டி அடித்து கொலை பெண் போலீசில் சரண்
/
மூதாட்டி அடித்து கொலை பெண் போலீசில் சரண்
ADDED : பிப் 14, 2025 01:41 AM

அவலுார்பேட்டை,:விழுப்புரம் மாவட்டம், வளத்தி அடுத்த கூடுவாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமிகாந்தி, 67. அதே ஊரைச் சேர்ந்தவர் வளர்மதி, 45. இருவரும் கணவரை இழந்தவர்கள். வளர்மதி மேல்மலையனுார் அடுத்த ஆர்க்காம்பூண்டியில் சத்துணவு பொறுப்பாளராக உள்ளார். இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன், 1.50 லட்சம் ரூபாயை லட்சுமிகாந்தியிடம் கடனாக வட்டிக்கு வாங்கியுள்ளார்.
பணத்தை திருப்பித் தராததால், நேற்று முன்தினம் வளர்மதி வீட்டிற்கு சென்ற லட்சுமிகாந்தி, கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில், வளர்மதி கட்டையால் தாக்கியதில், படுகாயமடைந்த லட்சுமிகாந்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
வளர்மதி, லட்சுமிகாந்தியின் உடலை வீட்டிலேயே மறைத்து வைத்து, நள்ளிரவில் எடுத்துச் சென்று அருகில் உள்ள நிலத்தில் போட்டுள்ளார். விசாரணையில் சிக்கி விடுவோம் என பயந்த வளர்மதி, நேற்று அதிகாலை வளத்தி காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் வளர்மதியை கைது செய்தனர்.

