ADDED : ஜூன் 08, 2026 05:34 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: வீட்டுமனைத் தகராறில் பெண்ணைத் திட்டி தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த கயத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன், 48; இவரது, அண்ணன் தேவராஜ் மகள் பானுப்பிரியா, 32; இவர்களுக்கு, அதே கிராமத்தில் 7 சென்ட் அளவில் பூர்வீக வீட்டுமனை உள்ளது.
வீட்டு மனை பிரித்ததில், இரு குடும்பத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 29ம் தேதி இது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பலராமன், உங்களுக்கு மனையில் பங்கு இல்லை, வீட்டை காலி செய்யுங்கள் என, பானுப்பிரியாவை தாக்கி மிரட்டியுள்ளார்.
இது குறித்து, பானுப்பிரியா அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து பலராமனை கைது செய்தனர்.
