/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காயங்களுடன் பெண் உடல் மரக்காணத்தில் பரபரப்பு
/
காயங்களுடன் பெண் உடல் மரக்காணத்தில் பரபரப்பு
ADDED : ஏப் 17, 2025 05:14 AM
விழுப்புரம்: மரக்காணம் அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மரக்காணம் அருகே தாழங்காடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன். நேற்று காலை 6.00 மணிக்கு அதே பகுதியில் உள்ள தனது நிலத்திற்கு சென்ற போது, அங்கு தலை மற்றும் நெற்றி பகுதிகளில் காயத்துடன், 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத திருமணமான பெண் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நடராஜன் அளித்த தகவலின்பேரில் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த பெண் உடலை கைப்பற்றி பிம்ஸ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த பெண் முகவரி, இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் தாழங்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

