ADDED : மார் 20, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில் வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டதால், கணவர் கைது செய்யப்பட்டார்.
காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள மோவூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் கார்த்திகேயன்,34; இவரது மனைவி மணிமேகலை,26; திருமணமாகி மூன்றரை ஆண்டாகும் இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளார்.
இந்நிலையில் கார்த்திகேயன் வரதட்சணை கேட்டு மணிமேகலையை துன்புறுத்தி வந்தார். இதனால் மனமுடைந்த மணிமேகலை நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் விரைந்து சென்று, மணிமேகலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, கார்த்திகேயனை கைது செய்தனர்.

