sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 டாஸ்மாக் கடை முன் பெண்கள் முற்றுகை: செஞ்சி அருகே பரபரப்பு

/

 டாஸ்மாக் கடை முன் பெண்கள் முற்றுகை: செஞ்சி அருகே பரபரப்பு

 டாஸ்மாக் கடை முன் பெண்கள் முற்றுகை: செஞ்சி அருகே பரபரப்பு

 டாஸ்மாக் கடை முன் பெண்கள் முற்றுகை: செஞ்சி அருகே பரபரப்பு


UPDATED : ஜன 03, 2026 09:06 AM

ADDED : ஜன 03, 2026 05:15 AM

Google News

UPDATED : ஜன 03, 2026 09:06 AM ADDED : ஜன 03, 2026 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி அருகே டாஸ்மாக் கடை முன் பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தில் நேற்று ஒரு வீட்டில் தாய், மகள் இருவரும் விவசாய வேலைக்கு சென்று விட்டு மதியம் 1:00 மணிக்கு வீடு திரும்பினர்.

அப்போது, வீட்டு வாசலில் தையூர் கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ், 23; என்பவர் போதையில் படுத்திருந்தார். அவரை, அங்கிருந்து போகும்படி பெண்கள் கூறியதும். அவர், ரகளையில் ஈடு பட்டு தனக்கு தானே கம்பியால் குத்தி காயப்படுத்திக் கொண்டார். அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் செஞ்சி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடன் ஏட்டு முனியப்பன் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். அப்போது, லோகேஷ் தகராறு செய்து ஏட்டு முனியப்பனை தாக்கினார்.

இதையடுத்து கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லோகேஷை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து லோகேஷை மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இச்சம்பவத்தால் பீதியடைந்த கிராம பெண்கள், குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் இருப்பதால்தான் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கிறது எனக் கூறி இரவு 8:00 மணியளவில் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு திரண்டு முற்றுகையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன், தாசில்தார் துரைச்செல்வன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், கிராமத்தைச் சேர்ந்த தேசிங்கு என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல வழக்கின் தீர்ப்பின்படி, குடியிருப்பு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை உடனே மூடி விடுவதாக உறுதி அளித்தனர். மேலும் அதே பகுதியில் உள்ள மற்றொரு கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து 8:30 மணியளவில் மறியலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us