/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்கள் கிரிக்கெட் மாவட்ட அணி தேர்வு
/
பெண்கள் கிரிக்கெட் மாவட்ட அணி தேர்வு
ADDED : ஏப் 24, 2025 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விக்கிரவாண்டியில் மாவட்ட கிரிக்கெட் பெண்கள் அணி தேர்வு வரும் 27ம் தேதி நடக்கிறது.
விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் ரமணன் அறிக்கை;
விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட கிரிக்கெட் பெண் அணி தேர்வு வரும் 27ம் தேதி காலை 9:00, மணிக்கு, விக்கிரவாண்டி, சூர்யா கல்லுாரியில் நடக்கிறது. தேர்வில் பங்கேற்கும் பெண்கள் 31.8.2013 அன்று அல்லது அதற்கு முன்பு பிறந்திருக்க வேண்டும். இத்தேர்வில் பங்குபெறுபவர்கள் தங்களது பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 95550 30006, 80988 99665 ஆகிய மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.

