ADDED : மார் 11, 2024 06:54 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம், : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோலியனுார் வட்டாரம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
நகர பொறுப்பாளர் கீதா தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) கவுசர் மகளிர்களுக்கு, புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
வட்டார கல்வி அலுவலர்கள் தேன்மொழி, ரவிச்சந்திரன் வாழ்த்திப் பேசினர்.
பள்ளி ஆசிரியர்கள், மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, மாவட்ட செயலாளர் பாலமுருகன், மகளிர் தின வரலாறு குறித்து கருத்துரை வழங்கினார். நகர துணைச் செயலாளர் சுதாஸ் நன்றி கூறினார்.
