ADDED : மார் 11, 2026 04:26 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் மகளிர் தின விழா நடந்தது.
விழாவிற்கு, மாவட்ட செயலாளர் பூங்கொடி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் திலகவதி வரவேற்றார். மாநில துணைச் செயலாளர் வளர்மதி சிறப்புரையாற்றினார்.
விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, மாதர் சங்க மாவட்ட செயலாளர் இலக்கியபாரதி, காங்., முன்னாள் மாவட்ட தலைவர் லதா பீட்டர், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன் வாழ்த்தி பேசினர்.
கூட்டத்தில், மதச்சார்பின்மை, பெண்களுக்கெதிரான வன் கொடுமைகளை தடுத்தல், மாணவிகளுக்கு பொது இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தப்பட்டது.
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் விழுப்புரத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி வரவேற்றார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் திரிஷா, மத்திய செயலாக்கு குழு உறுப்பினர் வேதாஞ்சலி வாழ்த்தி பேசினர். பாரதிய வித்யார்த்தி பரிஷத் வட தமிழக செயலாளர் பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். சமுதாயத்தில் மகளிர் பங்களிப்பு குறித்து, ராஷ்ட்ரிய சுயம்சேவக சங்க புதுச்சேரி கோட்ட அமைப்பாளர் ராஜதுரை, இணை அமைப்பாளர் ஸ்ரீபுவன் ராஜ்குமார், சமுதாயத்தில் பெண்கள் எதிர் கொள்ளக்கூடிய பிரச்னைகளை கையாள்வது பற்றி புதுச்சேரி பல்கலை., பேராசிரியர் மாலதி ஆகியோர் பேசினர்.
இந்நிகழ்ச்சியில் கோலப்போட்டி, மெஹந்தி போட்டி, விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கமலா கண்ணப்பன் நகர் விழுப்புரம் கமலா கண்ணப்பன் நகரில் நடந்த விழாவை, பேராசிரியர் யமுனா கண்ணன் துவக்கி வைத்தார். மாலதி வரவேற்றார். பவானி ஷியாம் சுந்தர் பேசினார். பேராசிரியர் கண்ணன் முருகன், கருணாநிதி, குழு ஆலோசகர் கலைச்செல்வி, பேராசிரியர் கலைவாணி, சுதா முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
மகளிர் குழுவைச் சேர்ந்த நாகஜோதி, உதயபானு, மஞ்சுளா, தனலட்சுமி, அனிதா, எழிலரசி, பிரேமா, கிருஷ்ண பிரியா, வளர்மதி, சிகாமணி, ஹரிதா ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
