ADDED : மார் 13, 2026 06:38 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த திருப்பச்சாவடிமேடு ஸ்ரீவித்யோதயா கல்வியியல் கல்லுாரியில், உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
கணித உதவி பேராசிரியர் ஜானகிராமன் வரவேற்றார். தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன் மகளிருக்கு நினைவு பரிசு வழங்கினார். ஸ்ரீவித்யோதா மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி இயக்குனர் ராஜீ வாழ்த்தி பேசினார். பேராசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர். இரண்டாம் ஆண்டு மாணவி அறிவுமதி நன்றி கூறினார்.
