ADDED : மார் 14, 2026 04:36 AM
அ நிறம் | அளவு
திண்டிவனம்: திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியில் உலக மகளிர் தின விழா நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவில் கணினி அறிவியல் துறை தலைவர் கார்குழலி வரவேற்றார். தமிழ் இணை பேராசிரியர் இளங்கோ வாழ்த்தி பேசினார். கல்லுாரி முதல்வர் நாராயணன் தலைமை தாங்கினார்.
மகளிர் தின விழாவையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, பேராசிரியை சுந்தரவல்லி பரிசு வழங்கி, பேசினார்.
விழாவில் கல்லுாரி மாணவிகள் திரளாக பங்கேற்றனர். இயற்பியல் துறை தலைவர் லதா நன்றி கூறினார்.
