ADDED : மார் 13, 2024 06:34 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம் : அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். கல்பனா சரவணன், முதல்வர் அன்பழகன், பேராசிரியை ஜோதி கல்பனா முன்னிலை வகித்தனர். மாணவி ராகவி வரவேற்றார்.
மாவட்ட குற்றவியல் மற்றும் மனித கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி, தற்போதைய சூழலில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றி கூறினார். மாணவி எப்சிபா நன்றி கூறினார்.
