ADDED : ஆக 12, 2026 04:30 PM
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண்கள் ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கீரிமேடு ஊராட்சி, கடந்த 1984 ம் ஆண்டு அரும்பட்டு ஊராட்சியில் இருந்து பிரித்து, தனி ஊராட்சியாக அரசால் அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி எல்லையாக அரசால் பிரித்து வழங்கப்பட்ட புல எண்கள் மற்றும் வரைபட ஆவணங்களின்படி அளந்து,
கீரிமேடு ஊராட்சியை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் அதிகாரிகளை கண்டித்து கீரிமேடு கிராமத்தில் நேற்று பெண்கள் சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைத்து எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதில் ஊராட்சி தலைவர் மீனாட்சி ராஜாராமன்,துணைத் தலைவர் சுதா சிவகுமார்,முன்னாள் தலைவர் சூடாமணி, முன்னாள் கவுன்சிலர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
