/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி
/
மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி
மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி
மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி
ADDED : ஜூலை 26, 2025 11:15 PM

விழுப்புரம்: மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய ஆடி கொண்டாட்டம் என்ற விற்பனை கண்காட்சி அரங்கம் திறப்பு விழா நடந்தது.
விழுப்புரம் பூ மாலை வணிக வளாகத்தில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி திறந்து வைத்து கூறுகையில், 'கண்காட்சி வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வரை நடக்கிறது. இதில், மாவட்டத்தில் இருந்து 45 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் 30 அரங்குகளில் திருவக்கரை கல்சிற்பங்கள், பட்டு பாரம்பரிய உணவுப்பொருட்கள், திண்பண்டங்கள், கைவினைப் பொருட்களின் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டு மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் தயாரித்த பொருட்களை வாங்கி பயன்பெற வேண்டும்' என்றார்.
மகளிர் திட்ட இயக்குநர் செந்தில்வடிவு, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.