/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.5 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் விழுப்புரத்தில் பணிகள் துவக்கம்
/
ரூ.5 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் விழுப்புரத்தில் பணிகள் துவக்கம்
ரூ.5 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் விழுப்புரத்தில் பணிகள் துவக்கம்
ரூ.5 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் விழுப்புரத்தில் பணிகள் துவக்கம்
ADDED : ஜூலை 30, 2025 11:08 PM

விழுப்புரம்: ரூ.5 கோடி மதிப்பில் நகராட்சி கூட்டு குடிநீர் திட்ட கட்டுமான பணியை லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட சாலாமேடு பகுதியில், ஏராளமான குடியிருப்புகள் பெருகி வருகின்றன.
விரிவாக்கம் செய்யப்பட்ட இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, திருப்பாச்சனுார், மலட்டாற்று பகுதியிலிருந்து ஆழ்துளை கிணறுகள் அமைத்து கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று, தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமணன், முதல்வருக்கு கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்று அங்கு ரூ.5 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இதையடுத்து விழுப்புரம் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சாலாமேடு இ.பி., காலனி 40வது வார்டில், ரூ.5 கோடியில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
இதில், லட்சுமணன் எம்.எல்.ஏ., பங்கேற்று, அடிக்கல் நாட்டினார். கூட்டு குடிநீர் திட்ட பணிகள் பூமி பூஜை போட்டு துவங்கப்பட்டது.
விழுப்புரம் நகராட்சி சேர்மன் வசந்தி, தி.மு.க., கிழக்கு நகர பொறுப்பாளர் வெற்றிவேல், வார்டு செயலாளர் தங்கம், நகர்மன்ற கவுன்சிலர்கள் ஜனனி தங்கம், மணி, மணவாளன், சாந்தராஜ், வசந்தா அன்பரசு, தி.மு.க., நிர்வாகிகள் செங்குட்டுவன், சக்கரவர்த்தி, ராமலிங்கம், சீனுவாசன், காத்தவராயன், அன்பழகன், கண்ணன், ஞானவேல், காளிமுத்து, தினேஷ், ஆனந்த் ராஜ், சுறா, அஜித்குமார், விக்னேஷ் மற்றும் அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.