/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிருப்தியில் வெளியேறிய கட்சியினரை தி.மு.க.,வில் இணைக்கும் பணி தீவிரம்
/
அதிருப்தியில் வெளியேறிய கட்சியினரை தி.மு.க.,வில் இணைக்கும் பணி தீவிரம்
அதிருப்தியில் வெளியேறிய கட்சியினரை தி.மு.க.,வில் இணைக்கும் பணி தீவிரம்
அதிருப்தியில் வெளியேறிய கட்சியினரை தி.மு.க.,வில் இணைக்கும் பணி தீவிரம்
ADDED : அக் 13, 2025 11:23 PM
வி ழு ப்புரத்தை சேர்ந்த அ.தி.மு.க., - பா.ம.க., கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும், சில தினங்களுக்கு முன் தி.மு .க.,வில் இணைந்தனர்.
விழுப்புரம் தொகுதி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பழனியப்பன், விழுப்புரம் நகர் மன்ற முன்னாள் துணை சேர்மன் பார்த்திபன், அ.தி.மு.க., பிரமுகர்கள் தணிகாசலம், கிளாரா, பா.ம.க., முன்னாள் நகர செயலாளர் முனுசாமி.
ேகாலியனுார் ஒன்றிய ம.தி.மு.க., ெசயலாளர்கள் முன்னாள் ஊராட்சி தலைவர் பிடாகம் ராஜா, அமரன், அ.ம.மு.க., பிரமுகர்கள் செல்வம், ராஜா, த.வெ.க., நகர செயலாளர் சையத்முபாரக் உள்ளிட்டோர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.,வில் இணைந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளரான லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
விழுப்புரம் மாவட்ட தி.மு.க.,வில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, 30 ஆண்டுக்கு மேல் அசைக்க முடியாத பலத்துடன் வலம் வந்தார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பழனியப்பன், சம்பத், மாசிலாமணி, அரசூர் பாலு, முன்னாள் நகர மன்ற தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் துணை சேர்மன் பார்த்திபன், முன்னாள் நகர செயலாளர் திருப்பதி பாலாஜி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும், தி.மு.க.,வில் இருந்து வெளியேறினர்.
இவர்களில் சிலர் வேறு கட்சியில் இணைந்து மாநில அளவிலான பொறுப்புகளில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிருப்தியில் வெளியேறிய மூத்த தி.மு.க.,வினரை கட்சிக்குள் மீண்டும் கொண்டு வரும் முயற்சிக்கு, கட்சித் தலைமை கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது.
இதையடுத்து, அடுத்தடுத்து மாற்று கட்சியில் உள்ள பலரும், தி.மு.க.,வில் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.