/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் முதல்வர் விழா மேடை பணிகள் துவங்கியது
/
விழுப்புரத்தில் முதல்வர் விழா மேடை பணிகள் துவங்கியது
விழுப்புரத்தில் முதல்வர் விழா மேடை பணிகள் துவங்கியது
விழுப்புரத்தில் முதல்வர் விழா மேடை பணிகள் துவங்கியது
ADDED : ஜன 12, 2025 04:48 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் விழா மேடை பணிகள் துவங்கியது.
விழுப்புரம் அடுத்த ஜானகிபுரத்தில் ரூ.9.70 கோடி செலவில், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம், இடஒதுக்கீடு தியாகிகளுக்கான மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றை, கடந்தாண்டு நவ.29 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வளாகத்தின் அருகே பிரமாண்டமான விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, கடந்த டிசம்பர் மாதம், பெஞ்சல் புயல் எச்சரிக்கை காரணமாக, முதல்வர் பங்கேற்கும் விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
தற்போது, இம்மாத இறுதியில் ( 28ம் தேதி) விழாவை நடத்த, அரசு அதிகாரிகள் தரப்பில் திட்டமிட்டுள்ளனர்.
இதனால், கடந்த சில தினங்களாக விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.