/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தெரு நாய்களை பிடிக்கும் பணி துவக்கம்
/
தெரு நாய்களை பிடிக்கும் பணி துவக்கம்
ADDED : ஆக 24, 2025 10:04 PM

திண்டிவனம் : திண்டிவனத்தில் நகராட்சி சார்பில், தெருநாய்களை பிடிக்கும் பணி துவங்கி உள்ளது.
திண்டிவனம் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் அதிக அளவில் தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்கள் சுற்றி வருவது பொது மக்கள் மத்தியில் அச்சுறுத்துலை ஏற்படுத்தி வந்தது.
தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என்று நகர்மன்ற கூட்டத்தில் அனைத்து கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் ஒரு மித்த கோரிக்கையை வைத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கிடங்கல் (1) பகுதியில் பள்ளி மாணவரை நாய் ஒன்று கடித்து குதறி, அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து நகராட்சி சார்பில் அதே பகுதியில் தனியார் ஆட்கள் மூலம் தெரு நாய்களை வலைபோட்டு பிடிக்கும் நடவடிக்கை, நகராட்சி சுகாதார அதிகாரி செந்தில் மேற்பார்வையில் நடந்தது. முதல் நாள் மட்டும் 25 நாய்கள் பிடிக்கப்பட்டன. இதேபோல, அனைத்து பகுதிகளிலும் தெரு நாய்கள் பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நகராட்சி தரப்பில் தெரிவித்துள்ளனர்.