நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம் : கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடியைச் சேர்ந்தவர் மணவாளவன், 40; கூலித் தொழிலாளி. இவர், நேற்று அதே பகுதியில் உள்ள முருகன் கோவில் அருகே அந்த வழியாக சென்றவர்களிடம் ஆபாசமாக பேசி தகராறு செய்து கொண்டிருந்தார்.
தகவலறிந்த கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் அங்கு சென்ற போது போலீசாரையும் அவதுாறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து மணவாளனை கைது செய்தனர்.