/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொழிலாளி தாக்கு: 2 பேர் மீது வழக்கு
/
தொழிலாளி தாக்கு: 2 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 29, 2025 07:16 AM
விழுப்புரம் : கூலித் தொழிலாளியைத் தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த சாத்திப்பட்டைச் சேர்ந்தவர் கன்சிராம், 29; கூலித் தொழிலாளி. இவரது கிராமத்தில் பஸ் நிலைய நிழற்குடை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்வது குறித்து முக்கியஸ்தர்கள் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் வீட்டிற்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் கட்டலாம் என கன்சிராம் கூறியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த தேவராஜ் பேரன்கள், விழுப்புரம் சேவியர் காலனியை சேர்ந்த பன்னீர்செல்வம் மற்றும் அவரது தம்பி மோகன்ராஜ், 22; ஆகி யோர் கன்சிராமை தாக்கி, மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில், பன்னீர்செல்வம், மோகன்ராஜ் மீது காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.