நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் நேபாளத்தை சேர்ந்த தொழிலாளி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் நகர் பிள்ளையார் கோவில் அருகே உள்ள மரத்தடியில், கடந்த 23ம் தேதி 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.
விழுப்புரம் தாலுகா போலீசார், உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வி.ஏ.ஓ., குபேந்திரன் அளித்த புகாரின் பேரில், போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் நேபாளம் நாட்டைச் சேர்ந்த சுபாஷ்லாமினி, 65; என்பதும், இங்கு வந்து பணியாற்றி வந்த நிலையில், மனநலம் பாதித்து சுற்றித்திரிந்தவர் உடல் நிலை பாதித்து, இறந்த தெரியவந்தது.
இது குறித்து, தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.