ADDED : மே 24, 2026 06:06 AM
அ நிறம் | அளவு
வானுார்: வேலைக்கு போகாததை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து கூலித் தொழிலாளி இறந்தார்.
கிளியனுார் அடுத்த கோவடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெரியண்ணன், 54; கூலித் தொழிலாளி. இவர், சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அதனை அவரது மனைவி கண்டித்தார்.
இதனால், மனமுடைந்த பெரியண்ணன், கடந்த 16ம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
உடன், முண்டிம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
