sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

/

 மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

 மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

 மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


ADDED : ஜன 28, 2026 06:43 AM

Google News

ADDED : ஜன 28, 2026 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் மின்சாரம் தாக்கியதில் சுமைதுாக்கும் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

விக்கிரவாண்டி அருகே பனையபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார், 32; இவர், விழுப்புரம் காய்கறி மார்கெட்டில் சுமை துாக்கும் தொழிலாளியாக உள்ளார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 2.30 மணிக்கு விழுப்புரம், ஜானகிபுரம் மார்கெட்டிற்கு காய்கறிகள் லோடுகள் ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது.

அந்த லாரியில் இருந்த மூட்டைகளை இறக்குவதற்காக சரத்குமார், லாரியில் ஏற முயன்றார். அப் போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியில் அவரது கை உரசியதில் துாக்கி வீசப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அங்கிருந்த சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சரத்குமார் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us