ADDED : ஜன 19, 2025 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: சாலையோரம் நடந்து சென்ற தொழிலாளி பைக் மோதி படுகாயமடைந்தார்.
மயிலம் அடுத்த கண்ணி யம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்,45; தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தழுதாளி - கண்ணியம் சாலை யோரம் நடந்து சென்றபோது, பின்னால் வந்த பைக் மோதியது. அதில், அவரது கால் எலும்பு முறிந்தது.
முதியவர் படுகாயம்
சின்னநெற்குணம் கிராமத்தில் சாலையோரமாக நடந்து சென்ற 60 வயது முதியவர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்விரு விபத்துகள் குறித்து மயிலம் போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

