ADDED : மே 01, 2026 03:27 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே இறுதிச்சடங்கில் பட்டாசு வெடித்ததில் தொழிலாளி காயமடைந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த தர்மாபுரியைச் சேர்ந்தவர் கண்ணன், 67; இவர், விபத்தில் இறந்ததையடுத்து, நேற்று முன்தினம் அவரது இறுதிச்சடங்கு ஊர்வலம் நடந்தது. அப்போது, கண்ணனின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் துளசிமணி, 40; பட்டாசு வெடித்தார்.
அங்கு மேளம் வாசித்து வந்த செம்மேடு கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன், 44; மீது பட்டு காயமடைந்தார். உடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புகாரின் பேரில், கெடார் போலீசார் துளசிமணி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
