ADDED : செப் 04, 2025 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் அருகே கொரளூரை சேர்ந்தவர் வீரப்பன், 44; இவருடைய நண்பர் வெங்கடேசன், 43; கூலித்தொழிலாளர்கள்.
இருவரும் நேற்று அதிகாலை 6:00 மணிக்கு, பைக்கில், திண்டிவனம் நோக்கி சென்றனர். பைக்கை வீரப்பன் ஓட்டி சென்றார். கூட்டேரிப்பட்டு அடுத்த கன்னிகாபுரம் அருகே செல்லும் பொழுது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், அந்த பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கின் பின்னால் அமர்ந்து சென்ற வெங்கடேசன் 43; என்பவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
வீரப்பனுக்கு கால் முறிவு ஏற்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.