ADDED : அக் 25, 2025 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: ரயில் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி இறந்தார்.
விழுப்புரம் அருகே வளவனுார் அடுத்த ஆலயாம்பாளையத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் ராஜலிங்கம்,36; கூலி தொழிலாளி. இவரது வீடு, விழுப்புரம் - புதுச்சேரி ரயில்பாதை அருகே உள்ளது.
இவர் நேற்று காலை 6:00 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே வந்து, ரயில்வே பாதையை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது, புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி சென்ற பேசஞ்சர் ரயில் மோதி உயிரிழந்தார். காது கேட்பதில் குறைபாடு இருந்ததால், ரயில் வந்தது தெரியாமல் விபத்தில் சிக்கியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து, விழுப்புரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

