ADDED : ஆக 03, 2025 04:37 AM
விழுப்புரம் : தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்கள் பொறியாளர் ஐக்கிய சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம், விழுப்புரத்தில் நடந்தது.
வட்ட தலைவர் சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சிவக்குமார், மண்டல செயலாளர் பெரியசாமி முன்னிலை வகித்தனர். பாலசுப்ரமணியன் வரவேற்றார். மாநில தலைவர் கண்ணன், பொதுச்செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் முத்துசாமி பேசினர்.
கூட்டத்தில், தமிழக மின் வாரியத்தில், கள உதவியாளர் காலி பணியிடங்களை ஐ.டி.ஐ., படித்தவர்களைக் கொண்டு நிரப்பிட வேண்டும். கடந்த 2009ம் ஆண்டில் பணியேற்பு செய்த கள உதவியாளர்களின் பயிற்சி காலத்தை ரத்து செய்து, அடிப்படை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து, புதிய வட்ட தலைவராக ராஜா, செயலாளராக ராஜ்குமார், பொருளாளராக ராஜா, பொறியாளர் பிரிவு செயலாளராக மோகன்ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
வட்ட இணைச் செயலாளர் வேல்மணி நன்றி கூறினார்.