ADDED : மார் 06, 2026 03:24 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் மின்னியல், மின்னணுவியல் துறை சார்பில் பயிலரங்கம் நடந்தது.
கல்லுாரி தாளாளர் சரவணன் தலைமை தாங்கி, மாணவர்களிடையே செயற்கை நுண்ணறிவு குறித்து பேசினார். கல்லுாரி முதல்வர் அன்பழகன் நோக்கவுரையாற்றினார். சென்னை வி.ஐ., மைக்ரோ சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் திட்ட மேலாளர் சுரேஷ், மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள் பற்றி விளக்கினார். பயிலரங்கில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
