/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுார் அரசு கலைக்கல்லுாரியில் மாணவர்களுக்கு பயிற்சி பட்டறை
/
வானுார் அரசு கலைக்கல்லுாரியில் மாணவர்களுக்கு பயிற்சி பட்டறை
வானுார் அரசு கலைக்கல்லுாரியில் மாணவர்களுக்கு பயிற்சி பட்டறை
வானுார் அரசு கலைக்கல்லுாரியில் மாணவர்களுக்கு பயிற்சி பட்டறை
ADDED : அக் 16, 2024 09:37 PM

வானுார் : வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்த பயிற்சி பட்டறை நடந்தது.
வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி , திருச்சி கிராமாலயா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து உலக சுகாதார நிறுவனத்தின் மைய கருத்தான கை கழுவுதல் மற்றும் சுகாதாரம் குறித்த ஒருநாள் பயிற்சி பட்டறை கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
ஆங்கிலத்துறைத் தலைவர் ராஜராஜேஸ்வரி ஜெயராணி வரவேற்றார்.
இந்த பயிற்சி பட்டறையை கல்லுாரி முதல்வர் வில்லியம் துவக்கி வைத்தார். கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் பயிற்றுநர்கள் தமிழ்செல்வி, கார்குழலி, சுப்புலட்சுமி ஆகியோர் பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியை உதவிப் பேராசிரியர் காந்திமதி ஒருங்கிணைத்தார். இதில், கல்லுாரி மாணவ, மாணவியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.