/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா
/
அரசு பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா
ADDED : ஜூன் 06, 2025 07:07 AM

விழுப்புரம்; உலக சுற்றுச்சூழல் தின விழா, விழுப்புரம் ஹாஜி மன்சூர்ஷா ஓரியண்டல் உயர்நிலை பள்ளியில் (அரசு உதவி பெறும் பள்ளி) நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ராதிகா தலைமை தாங்கினார். அறிவியல் ஆசிரியர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட செயலாளர் பாலமுருகன், உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடுவதன் அவசியம் பற்றியும், இதை பாதுகாக்க தவறியதால் காலநிலைகள் மாற்றம் ஏற்படுவது குறித்தும் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின், மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் எலிசபெத், ஏஞ்சல், மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.