/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உலக முதலீட்டாளர் மாநாடு விழுப்புரத்தில் நேரலை
/
உலக முதலீட்டாளர் மாநாடு விழுப்புரத்தில் நேரலை
ADDED : ஜன 07, 2024 05:20 AM
விழுப்புரம்: சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாடு நிகழ்ச்சிகள், விழுப்புரம் மாவட்டத்தில் நேரலை செய்யப்படுகிறது.
கலெக்டர் பழனி, செய்திக்குறிப்பு:
சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், 'உலக முதலீட்டாளர் மாநாடு 2024' துவக்க நிகழ்ச்சி, தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இன்று 7ம் தேதி துவங்குகிறது.
இந்நிகழ்ச்சியின் நேரலை, விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று காலை 9:30 மணி முதல் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
மேலும், மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளிலும், நேரலை செய்யப்படும். இத்துடன், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் நடமாடும் வாகனம் மூலமாகவும், நிகழ்ச்சியை நேரலை செய்யப்படும்.
இதில், தொழிலதிபர்கள், தொழில் முனைவோர், இளைஞர்கள், மாணவர்கள், நேரலையில் பங்கேற்று பயன்பெறலாம்.
மேலும், இந்நிகழ்ச்சிகளை இன்று மற்றும் நாளை 8ம் தேதியும் www.tngim2024.com இணையப் பக்கத்திலும் காணலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.