தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ உலக காசநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி  

 உலக காசநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி  

 உலக காசநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி  


ADDED : மார் 25, 2026 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 11:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் மாவட்ட காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் இ.எஸ். செவிலியர் கல்லுாரி சார்பில் உலக காசநோய் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம் இ.எஸ். செவிலியர் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுரி முதல்வர் பொற்செல்வி வரவேற்றார். மாவட்ட காச நோய் பிரிது துணை இயக்குநர் சுதாகர் சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது காசநோய் அறிகுறிகளான 2 வாரங்களுக்கு மேல் இருமல், பசியின்மை, தொடர்ச்சியாக எடை குறைதல், மாலை நேர காய்ச்சல், சளியில் ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் இருக்கும், இந்த அறிகுறிகள் இருப்பின் அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையம், மாவட்ட காசநோய் மையங்களில் பரிசோதனை செய்து, காசநோய் இருப்பின் அரசு மருத்துவமனையிலேயே 6 மாதம் இலவச மருத்துவம் எடுத்து குணப்படுத்திக்கொள்ளலாம் என்றும் கூறினார்.

காசநோய் தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் காசநோய் கண்டறியும் முகாம் தொடங்கி 100 நாட்கள் நடக்க உள்ளதால், பொது மக்கள் அதிநவீன காசநோய் வாகனத்தை அணுகி எக்ஸ்ரே மற்றும் சளி பரிசோதனை செய்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள், காசநோய் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us