/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நீதிமன்ற பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு: 358 பேர் பங்கேற்பு
/
நீதிமன்ற பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு: 358 பேர் பங்கேற்பு
நீதிமன்ற பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு: 358 பேர் பங்கேற்பு
நீதிமன்ற பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு: 358 பேர் பங்கேற்பு
ADDED : அக் 21, 2024 04:26 AM
விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நடந்த நீதிமன்ற பணியாளர்களுக்கான தேர்வில் 358 பேர் தேர்வு எழுதினர்.
தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிமன்ற ஊழியர்களுக்கான காலி பணியிடங்களுக்கு இரு தினங்களாக தேர்வு நடந்தது.
நீதிமன்ற கட்டளை நிறைவேற்றுனர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், நகல் பரிசோதகர் பணிகளுக்கான தேர்வு நேற்று முன்தினம் நடந்தது.
இதனையடுத்து, நேற்று டிரைவர், அலுவலக உதவியாளர் பணிக்கான தேர்வு நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) இளவரசன் மேற்பார்வையில் தேர்வுகள் நடந்தது. நேற்று விழுப்புரம் அரசு மகளிர் கல்லுாரி மையத்தில் டிரைவர், உதவியாளர் பணிக்கான தேர்வு நடந்தது. 568 பேர் எழுதுவதற்கு தேர்வாகியிருந்த நிலையில், 358 பேர் பங்கேற்றனர். 210 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
தேர்வுக்கான ஏற்பாடுகளை, நீதித்துறை பணியாளர்கள் செய்திருந்தனர்.