/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தவறான வழிகாட்டி பலகை; புறவழிச்சாலையில் குழப்பம்
/
தவறான வழிகாட்டி பலகை; புறவழிச்சாலையில் குழப்பம்
ADDED : ஜூன் 05, 2025 07:15 AM

விழுப்புரம்; நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் விழுப்புரத்திற்கு தவறான வழிகாட்டி பலகை வைத்துள்ளதால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு, 194 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை 45ஏ உள்ளது. விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் ஆகிய நகருக்குள் செல்லாமல் வெளிவட்ட சாலையில் நாகப்பட்டினம் சென்றடையும் வகையில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது
இந்த சாலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பணிகள் முடிந்த பகுதிகளில் ைஹமாஸ் விளக்கு, பெயர் பலகைகள், அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விழுப்புரம் அடுத்த திருப்பாச்சனுார் மேம்பாலம் பகுதியில் புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வரும் பகுதியில் ஊர்களை குறிக்கும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
அதில், அருகருகில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒன்றில் விழுப்புரத்திற்கு செல்லும் குறியீடு சரியாகவும், அடுத்த பலகையில் திருப்பாச்சனுார் செல்லும் மார்க்கத்தை விழுப்புரம் என்றும் தவறாக குறியிட்டு வைத்துள்ளனர். இது வாகன ஓட்டிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், எந்த அறிவிப்பு பலகை சரியானது என தெரியாமல் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
எனவே, தவறாக வைத்துள்ள அறிவிப்பு பலகையை மாற்றி சரியான மார்க்கத்தை குறிக்க தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.