/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
யாதவர் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம்
/
யாதவர் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 21, 2025 04:55 AM

செஞ்சி: செஞ்சியில் யாதவர் மக்கள் இயக்க உயர்மட்ட குழு மற்றும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சத்யா தலைமை தாங்கினார். நாராயணன் முன்னிலை வகித்தார். இளைஞரணி செயலாளர் பிரசாந்த் வரவேற்றார். நிறுவன தலைவர் ராஜாராம் பேசினார். பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் எழிலரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், யுனெஸ்கோ செஞ்சி கோட்டையை உலக பராம்பரிய சின்னமாக அறிவித்திருப்பதை வரவேற்கிறோம், கோனார் வம்சத்தைச் சேர்ந்த ஆனந்தகோன் கட்டிய செஞ்சி கோட்டையை மராட்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டை என யுனெஸ்கோ அறிவித்திருப்பதை கண்டிக்கிறோம்.
தமிழக முதல்வர் செஞ்சி கோட்டையை நேரில் கண்டறிந்து தமிழர்களால் கட்டப்பட்ட கோட்டை என்பதை மத்திய அரசுக்கு ஒரு வாரத்திற்குள் எடுத்து கூறி மாற்றி அறிவிக்க வேண்டும். இல்லை எனில் கோட்டையின் எதிரே பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 300 ஆண்டுகள் செஞ்சி கோட்டையை ஆட்சி செய்த யாதவ மன்னர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கோட்டை முகப்பில் ஆனந்தகோனார் சிலை மற்றும் மணி மண்டபம் கட்ட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.