/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றீங்களே' கலாய்த்த அமைச்சர்: கலகலப்பான உ.பி.,கள்

ADDED : செப் 16, 2025 03:11 AM
செஞ்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசியவர்கள், தேர்தல் நேரத்தில் பேசுவதை போல் மிக சீரியசாக பேசி தொண்டர்களுக்கு அறிவுரைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தனர்.
இதே பாணி பேச்சை நீண்ட நேரம் கேட்டு தொண்டர்கள் சலித்து போய் இருந்தனர். இறுதியாக மண்டல பொறுப்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வம் வந்தார். அவர் பேச்சை துவங்கியதும் நிர்வாகிகளும், தொண்டர்களும் சால்வை, வேட்டி வழங்கினர்.
அதை வாங்க மறுத்த அமைச்சர், 'நான் சாதாரணமானவன், எனக்கு வரவேற்பு தேவையில்லை, என்னை எரிச்சல் மூட்டாமல் இருந்தால் நான் நல்லவனாக இருப்பேன். இதுதான் என்னோட கேரக்டர். எரிச்சல் மூட்டினால் கடுப்பாகி விடுவேன்.
துண்டு போடுவது சால்வை போடுவது என படம் காட்டினால் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. சால்வை, துண்டு போட்டால் போடுபவருக்கு நான் எதேனும் செய்ய வேண்டும் என்ற கடமை எனக்கு வந்துவிடும்.
எற்கனவே எனக்கு நிறைய கடமை இருக்கிறது. துண்டு போட்டு படம் காட்ட வேண்டாம்' என்றார். இதனைக் கேட்ட உடன் பிறப்புகள் கலகலப்பாயினர். துண்டு போடவும், சால்வை போடவும் தயாராக இருந்தவர்கள் கூட ஜகா வாங்கி னர்.