நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், ; விழுப்புரம் அருகே தாய் திட்டியதால் மகள் தற்கொலை செய்துகொண்டார்.
விழுப்புரம் அடுத்த கலிஞ்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகள் முத்தரசி,26; பி.காம்., பட்டதாரியான இவர், கடலூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவர், வீட்டிற்கு வந்து, எந்த வேலையும் செய்யாமல் இருந்ததால், அவரது தாயார் மங்கை, கண்டித்தார்.
இதனால் மனமுடைந்த முத்தரசி, கடந்த 23ம் தேதி வீட்டில் ஆளில்லாத நேரத்தில், மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

