நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே வயிற்று வலியால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சித்தலிங்கமடம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி அழகம்மாள்,21; இவருக்கு கடந்த சில மாதங்களாக த வயிற்று வலி இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 21ம் தேதி இரவு 7:30 மணியளவில் திடீரென வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்த அழகம்மாள் விஷம் குடித்து மயங்கினார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று பகல் 12:00 மணியளவில் உயிரிழந்தார். இது குறித்து இவரது சித்தப்பா முருகன் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

